ADS

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Use HosurOnline's FREE online Match Making Software to get Jathaka Porutham for marriage

Thirumana Poruththam - Vethai porutham - this combination helps in avoiding differeces in the way of thinking

வேதை பொருத்தம் :

கணவன் மனைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் இந்த வேதையை அறிய வேண்டும். இல்லை என்றால் ஒரே கருத்து இரண்டு பேருக்கு என்றாலும் அதை இவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நிரந்தரமான கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டே இருக்கும்.

இனி சந்தோஷமாயிருந்த தம்பதியினருக்குள் திடீரென்று பிரச்சனைகள் உருவாகக் காரணம் என்னவென்று, அது எவ்வளவு நாள் நீடிக்கும் என்றும் பார்க்கலாம். எலியும் பூனையுமாக இருந்த தம்பதியினர் இப்பொழுது மனமொத்தவர்களாக இருப்பது எப்படி?

இதற்கு காரணம் தசா பொருத்தம் வேதை ஆவதுதான் காரணம். மனைவியின் நடப்பு திசை கணவனின் திசைக்கு சத்ரு திசையாக இருந்தாலும், கணவனின் நடப்பு திசை மனைவியின் திசைக்கு சத்ருவாக இருந்தாலும் இந்த தற்காலிக பிரிவு உண்டாகும்.

இதை தவிர்க்க முடியாது. ஆனால் தெரிந்து இந்த வேறுபாடு பெரிதாகாமல் சிறிய நிலையியே கட்டுப்படுத்தி அனுசரித்து செல்லலாம்.

நடப்பு திசை நடப்பு திசை
ஆண் பெண்

சூரியன் சனி

சந்திரன் சனி சூரியன்

செவ்வாய் குரு

புதன் செவ்வாய்

குரு சனி சூரியன்

சுக்ரன்

சனி சுக்ரன் குரு



ஆண் பெண் இருவரின் திசைகள் இங்கு கொடுத்துள்ள கட்டத்தில் உள்ள திசைகளாக இருந்தால் அது பொருத்தமானதாக இருக்காது. அப்படி இல்லை திசா பொருத்தம்தானே என்றால் அந்த கால கட்டங்கள் கொடுமையானதாக இருக்கும்.

இனி இங்கு கொடுத்துளள கட்டங்களில் ஆண் பெண் என்று இரண்டு பிரிவுகள்.அதில் இருவரின் 27 நட்சத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது மணப்பெண்ணின் நட்சத்திரத்தை தொட்டு அதே கட்டத்தில் மணமகனின் நட்சத்திரம் வரை நேர் கீழாக வந்து இரண்டு சந்திக்கும் இடத்தில் உள்ள குறியை கவனிக்க வேண்டும்.

அந்த கட்டம் காலியாக இருந்தால் சரி மணம் செய்யலாம் அல்லாது X என்றால் வேண்டாம் என்று பொருள். இப்படியாக எல்லாப் பொருத்தங்களும் பார்த்து தேர்ந்து எடுக்க வேண்டும்.

இதில் முக்கியமாக ரஜ்ஜு, வசியம், நாடி, யோனி, கணம், திசா பொருத்தங்கள் மிகவும் முக்கியம்.

இதன் பிறகு திருமண நாள் நிச்சயிக்கப்படும் பொழுது கிழே கொடுக்கப்பட்டுள்ள நாட்கள் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

Vethai Poruththam