Use HosurOnline's FREE online Match Making Software to get Jathaka Porutham for marriage

Thirumana Poruththam

திருமணப் பொருத்தம்


அகண்ட பிரபஞ்சத்தில் நம் சூரிய குடும்பத்தைப் போல பல்லாயிரக் கணக்கான சூரிய குடும்பங்களையும், நட்சத்திர மண்டலங்களையும் படைத்து அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் இயக்கி அவரவர் தேவைகளை ஈடேற்றி வைத்து,அவர் தம் பாவ புண்ணியங்களில் அடிப்படையில் கர்மங்களை நடத்தி வரும் இறைவனின் பேரருள் நம்மை வியக்க வைத்தாலும் எல்லாம் அவன் செயல் என்பது உண்மை. ஆணுக்கும்,பெண்ணுக்கும் அவர்களின் ஜென்ம லக்கினம் நிர்ணயம் ஆகும் பொழுது அவர்களின் ஏழாம் இடமும் நிச்சயிக்கப்படுகிறது.

ஏழாமிடமும் நிச்சயம் செய்தவுடன் அவர்களின் திருமண வாழ்க்கையும் உறுதி செய்யப்பட்டு விடுகிறது என்பதும் உண்மை. இந்த ஏழாமிடத்தத்துவம் 7க்கு 7ஆகிய லக்னம் என்ற உயிர் 8ன் 7க்கு 8 என்ற தனவாக்கு குடும்ப ஸ்தானமாகவும் இருப்பதே ஆண்டவன் படைப்பின் அதிசய ரகசியம் நமக்கு புரியும்.இதில் நாம் செய்ய வேண்டியது எல்லாம் 7ம் இடத்துக்கு 1மிடம் இணையும்போது 1க்கு 2மிடமும்,7க்கு 2ம் இடமும் சுபிட்சம் அடையுமா என்பதை தேடி கண்டு பிடிக்க வேண்டியது மட்டுமே.இந்த சூட்சமும் ஆண்டவனின் அருள் பெற்றவர்களால் இந்த படைப்பின் பிரம்ம ரகசியம் அறிந்துணர்ந்து உரைக்கப்படும் என்பது இறைவன் கட்டளை.

இது உலக நன்மைக்காக மட்டுமே செய்ய வேண்டும் என்பதும் விதி.நல்ல செழிப்பான நிலத்தில்,நல்ல வீரியமுள்ள விதை விழும் பொழுது மிகவும் பயனுள்ள மரங்களும் செடி கொடிகளும் ஆயுள் கால நிர்ணயப்படி நிலைத்த பலன் கொடுத்து மக்களை மகிழ செய்து தலைமுறைகளுக்கு கால காலங்களுக்கு பயனளிக்கின்றன.நம் மனித வாழ்விலும் நல்ல தலைமுறைகளை உருவாக்கி உலகத்தில் மக்கள் நல்வாழ்வுக்கு பாடுபடவும் மகிழ்ச்சியான வாழ்வை அனுபவிக்கவும் வரும் தலைமுறைக்கு ஒரு உதாரணமாக வாழ்ந்து காட்டி அவர்கள் வாழ வழி காட்டவும் நாம்(இரண்டு பேரை)ஆணையும்,பெண்ணையும் இணைக்க திருமண என்ற ஆயுட்கால பந்தம் ஏற்படுத்தி அதை ஒரு விழாவாக கொண்டாடி மகிழ்கிறோம்.

நமக்கு நம் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த இந்த மரபுகள் ஆண்டவனால் மனிதனுக்கு வழங்கப்பட்டது. இன்று விஞ்ஞான முன்னேற்றத்தில் நாம் சந்திரமண்டலம், செவ்வாய் மண்டலம் என்று அரிச்சுவடி நிலையில் இருக்கிறோம். இவை விஞ்ஞானிகள் நம் முன்னோர்கள் அருளிக் கொடுத்ததில் இருந்து தெரிந்து கொண்ட சில விஷயங்கள். அதன் அடிப்படையில் ராக்கட் உருவாக்கி பிரபஞ்ச ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் நம் மூதாதையர்கள் யோகம்,தவம்,அஷ்டமா சித்தி ஆகிய வித்தைகள் மூலம் மேலே பிரபஞ்சத்தில் சஞ்சரித்து கிரக நிலைகளையும் ஆராய்ந்து உணர்ந்து உருவாக்கி நமக்கு அருளியதுதான் இந்த ஜோதிடம். நம் வாழ்வில் திருமணம் என்பது மிக முக்கியமான திருப்பு முனையாக அமையக் காரணம்,அது நம் தலைமுறை உருவாக்கக் காரணமாக இருப்பதே. வாரிசுகளும், தலைமுறைகளும், இனப் பெருக்கங்களும் மனித,மிருக,தாவர மற்றும் இயற்கையின் பிள்ளைகளான மழை,காற்று,பூமி,ஆகாயம்,நெருப்பு போன்ற பஞ்ச பூதங்களும் இந்த கடமையை ஆண்டவன் கட்டளையாக எண்ணி செயல்படுகின்றன

இந்த செயல் பூமியின் சமன்பாட்டை சரிசெய்யவே உண்டாக்கப்பட்ட நியதி.

"விநாச காலே விபரித புத்தி" என்பது போல நாம் அழிய வேண்டும் என்ற விதி இருந்தால் நம் எண்ணத்தில் நல்ல எண்ணங்கள் தோன்றாது என்பதே சாஸ்திரம். நாம் இந்த மண்ணில் குரூரமான வாரிசுகளை உருவாக்கி விட வேண்டும் என்ற விதி இருந்தால் நமக்கு இந்த ஜோதிட அறிவு வேலை சேய்யாது. நம் கண்களை அறிவையும் முடக்கி தவறான சேர்க்கையினால் பஞ்சமா பாதங்களை செய்யக் க்ஷடிய குழந்தைகளை இந்தப் பூவுலகிற்கு வழங்கி விடுகிறோம். நமது இந்தச் செயல்களால் பல தலைமுறைகளை நாம் பாவம் செய்வதில் ஈடுபட செய்கிறோம். பின்னர் இதிலிருந்து வெளியே வராமலேயே நாம் மட்டும் அல்லாது நம் தலைமுறையினரையும் நாசம் செய்கிறோம்.

இதுவும் ஆண்டவன் செயல்தான் என்றாலும், ஆண்டவனை மறந்து, அவனை நிந்தித்து, அவன் வகுத்துக் கொடுத்த விதிமுறைகளை மறந்து நாம் நம் சுய முடிவுகளை எடுக்கும் போது வரும் விளைவுகளும் நம்மையே சாரும் என்பதால் நம் தவறுகள் நம்மோடு நில்லாமல், நம் தலைமுறைகளையும் பாதித்து விடுகிறது. இப்படித்தான் கலியுகம் தோன்றியது. இதில் இன்னும் வேகமாகச் செல்லும் மிகப் பெரிய பிரளயத்திற்கு வழிவகுக்கும்.

இதில் இருந்து நாம் தப்ப ஆண்டவன் பாதம் பிடித்து அவன் வகுத்து கொடுத்த நியதிகளை கடைப்பிடித்து இந்த திருமண பொருத்தம் நூலில் குறிப்பிட்ட விதிகளை கடுமையாக கடைப்பிடித்து தங்கள் துணையை தேர்ந்தெடுத்தால் நாமும் சுகமாக வாழ்ந்து, தலைமுறைகளையும் சுகமாக வாழ வைக்க முடியும் என்பது திண்ணம்.

நாம் இந்த நூலில் கொடுத்துள்ள இந்த பொருத்த விதிகள் பல நூல்களில் இருந்து திரட்டப்பட்டது. நன்கு ஆராய்ந்து எளிய முறையில் எல்லாராலும் கையாளும் விதமாக இதை உருவாக்கியுள்ளோம். இதை உபயோகித்து சுகமாக வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்.